NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இது சந்தோஷமான விவாகரத்து – கிரண் ராவ்

ஆமீர் கானும், இயக்குநர் கிரண் ராவும் காதலித்து கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

டந்த 2021ம் ஆண்டு ஆமீர் கானும், கிரண் ராவும் விவாகரத்து பெற்றுவிட்டார்கள்.

விவாகரத்திற்கு பிறகு கிரண் ராவ் இயக்கிய Laapataa Ladies படத்தை தயாரித்தார் ஆமீர் கான். இந்நிலையில் இது ரொம்ப சந்தோஷமான விவாகரத்து.

ஆண்டுகள் செல்லச் செல்ல மனிதர்கள் மாறுகிறார்கள். நமக்கு பிடித்த விஷயங்களும் மாறுகிறது. விவாகரத்து தான் எனக்கு சந்தோஷத்தை கொடுக்கும் என நினைத்தேன்.உண்மையை சொல்ல வேண்டும் என்றால், விவாகரத்தால் நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.

விவாகரத்து பெற்றாலோ அல்லை வாழ்க்கைத் துணையை இழந்தாலோ தனிமையை நினைத்து தான் பலரும் கவலைப்படுகிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் விவாகரத்திற்கு பிறகு நான் தனிமையில் இருப்பதாக நினைக்கவில்லை. எனக்கு என் குடும்பம் மற்றும் ஆமீர் கானின் குடும்பம் ஆதரவாக இருக்கிறது. இது ரொம்ப மகிழ்ச்சிகரமான விவாகரத்தாக உள்ளது என்றார்.

Share:

Related Articles