NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியில் ரீமேக்காகும் பரியேறும் பெருமாள்?

கடந்த 2018ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் பரியேறும் பெருமாள். இதில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு, மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தை அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதன் பின்னணியில் உள்ள சாதிய முரண்பாடுகளை பற்றி பேசும் படமாக எடுக்க கரண் ஜோஹர் திட்டமிட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதன்மை கதாபாத்திரங்களில் சித்தார்த் சதுர்வேடியும், டிரிப்டி டிமிரி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Share:

Related Articles