NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்திய நடிகர்கள் ஹாலிவுட் வரவேண்டும் – பிரியங்கா சோப்ரா

தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அவர் ஹாலிவுட் நடிகர் களுடன் நடித்துள்ள சிட்டாடல் வெப் தொடர் ஓ.டி.டியில் வெளியாக இருக்கிறது.இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா அளித்துள்ள பேட்டியில், “இந்தியில் பிரபல நடிகையாக உயர்ந்த நான் ஹாலிவுட்டுக்கு சென்ற புதிதில் எனக்கு நடிக்க வருமா என்று தேர்வு வைத்துத்தான் வாய்ப்பு கொடுத்தார்கள். அதை நான் தவறாக நினைக்கவில்லை.

இப்போது சிட்டாடல் தொடருக்கு ஆடிஷன் இல்லாமலேயே தேர்வாகி விட்டேன். அந்த அளவுக்கு எனது திறமையை ஹாலிவுட்டில் நிரூபித்து விட்டேன். அதுபோல் நடிகர்களுக்கு இணையான சம்பளத்தையும் பெற்றுக்கொண்டேன்.

இந்தியாவில் சினிமா துறையில் இருந்த தெற்கு வடக்கு எல்லைகள் அழிந்து விட்டது. எங்கு பார்த்தாலும் இந்திய நடிகர்களாக இருக்கிறார்கள். அனைவரையும் இந்திய நடிகர்கள் என்றுதான் அழைக்கிறார்கள். இந்திய சினிமா என்றுதான் சொல்கிறார்கள்.

திரையில் மட்டுமின்றி திறைக்கு பின்னாலும் இந்திய தொழில்நுட்ப கலைஞர்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்திய நடிகர்-நடிகைகளும், தொழில்நுட்ப கலைஞர்களும் ஹாலிவுட்டுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். காரணம் நமது இந்தியர்களிடம் அவ்வளவு திறமை இருக்கிறது” என்றார்.

Share:

Related Articles