NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இப்போதைக்கு திருமணம் இல்லை – நடிகை தமன்னா

நடிகை தமன்னா விஜய் வர்மாவை காதலித்து வருவதாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வந்ததையடுத்து சமீபத்தில் விஜய் வர்மாவுடனான காதலை உறுதி செய்தார்.

இந்நிலையில், நடிகை தமன்னா தற்போது அவருக்கு திருமணம் நடைபெறபோவதில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,

” திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்ள தான் போகிறேன். ஆனால், இப்போது அதற்கான மனநிலை இல்லை.

விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். படப்பிடிப்புதான் இப்போது என் மகிழ்வான இடம்” என்று தெரிவித்துள்ளர்.

Share:

Related Articles