NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இயக்குநர் சஞ்சய் காத்வி மாரடைப்பால் மரணம்

2004ம் ஆண்டு அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான படம் “தூம்”. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து 2006ம் ஆண்டு ஹ்ரித்திக் ரோஷன் நடித்து வெளியான “தூம் 2” திரைப்படமும் பெரும் வெற்றிபெற்றது. இந்த இரண்டு படங்களை இயக்கியவர் சஞ்சய் காத்வி.

இந்த நிலையில், 56 வயதாகும் சஞ்சய் காத்வி இன்று மும்பையில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது மாரடைப்பால் காலமானார்.

இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அவரது மகள் அவர் மிகவும் ஆரோக்கியமாக இருந்ததாகவும், அவரது உடலில் எந்த பிரச்சினைகளும் இதற்கு முன்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் காத்வி மறைவு Bollywood வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் அபிஷேக் பச்சன், பிபாஷா பாசு ஆகியோர் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles