நடிகரும் வில்வித்தை பயிற்சியாளருமான ஷீகான் ஹூசைனி கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி 2025 ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் ஹுசைனி தனது வீட்டை தெலுங்கு பிரபல நடிகரான பவன் கல்யாணுக்கு ஏழுதி வைத்திருப்பதாக தற்போது ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன.
பவன் கல்யாண் ஹுசைனியிடம் பயிற்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடதக்கது . மேலும் இந்த வீட்டை தனது நினைவிடமாக அவர் மாற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறாராம்.
எனினும் இது தொடர்போயிலான உத்தியோக பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.