NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உண்மையை உடைத்த நடிகர் மாதவன்

நடிகர் மாதவன், ‘The Railway Man’ என்ற Web தொடரில் இப்போது நடித்துள்ளார். Netfilixல் வெளியாகியுள்ள இந்த தொடர், போபால் விஷவாயு சம்பவத்தின் பின்னணியில் உருவாகியுள்ளது. இதில் மாதவனுடன் கே.கே. மேனன், சன்னி இந்துஜா, ஜுஹி சாவ்லா உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஷிவ் ராவைல் இயக்கியுள்ள இந்தத் தொடரின் Promotion நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜுஹி சாவ்லா இந்த தொடரில் இணைந்தது பற்றி கூறினார்.

அப்போது மாதவன், “அதிர்ஷ்டவசமாக இதில் நடிக்க நீங்கள் ஓகே சொன்னீர்கள். உங்கள் முன் ஒர் உண்மையை சொல்ல வேண்டும். ஆமிர்கானுடன் ஜுஹி சாவ்லா நடித்த ‘கயாமத் சே கயாமத் தக்’ (1988) படத்தைப் பார்த்துவிட்டு என் அம்மாவிடம் சொன்னேன், ‘நான் ஜுஹி சாவ்லாவை திருமணம் செய்துகொள்ள வேண்டும்’ என்று. அதுதான் அப்போது எனக் கிருந்த ஒரே நோக்கம்” என்றார்.

பின்னர் “இந்த தொடரில் கூட சேர்ந்து நடிக்க முடியவில்லை. எனது பகுதிகளை படமாக்கிய பின்னரே ஜுஹி நடித்தார்” என்றார்

Share:

Related Articles