தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மோகன் ராஜா. இவர் இயக்கத்தில் வெளியான பல்வேறு படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன.
அந்த வரிசையில் இவர் எழுதி இயக்கிய தனி ஒருவன் படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான காட் ஃபாதர் திரைப்படத்தை மோகன் ராஜா இயக்கினார்.
இப்படம் மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான லூசிஃபர் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். காட் ஃபாதர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து இயக்குநர் மோகன் ராஜா சிரஞ்சீவியை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. மேலும் இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
சிரஞ்சீவியின் சகோதரர், நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனது ஜன சேனா கட்சி மூலம் களம் கண்டார்.
தேர்தலில் அவரது ஜன சேனா கட்சி வேட்பாளர்கள் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இதையடுத்து ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவின் புதிய முதலமைச்சராக சந்திரபாபு நாயுடுவும், துணை முதல்வராக பவன் கல்யாணும் பதவியேற்றனர். இவர்களுடன் அமைச்சர்கள் பதவியேற்பும் நடைபெற்றது.
விரைவில் மோகன் ராஜா இயக்கவிருக்கும் சிரஞ்சீவி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.