NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எதிர்நீச்சல் தொடரில் Re Entry கொடுக்கிறாரா பிரபல நடிகை

எதிர்நீச்சல் Sun தொலைக்காட்சியில் வெற்றிகரமாக மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வரும் தொடர்.

4 பெண்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் இந்த தொடரின் கதையில் வில்லன் குணசேகரன் தொடர்ந்து ஜெயித்துக்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தான் சமூக வலைதளங்களில் எதிர்நீச்சல் புகழ் ஈஸ்வரி ஒரு நடிகையுடன் எடுத்த புகைப்படம் திடீரென வைரலாகி வருகிறது.

அதாவது கதையில் முக்கிய பங்கு வகித்துவந்த அப்பத்தா கேரக்டர் மீண்டும் கதையில் வருகிறதா என்ற கேள்வி ரசிகர்களிடம் வந்துள்ளது. காரணம் கனிகா பாம்பே ஞானத்துடன் எடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.  

Share:

Related Articles