NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“என் ஆரம்பகால போராட்டங்கள் மோசமானவை” – Bollywood நடிகர் மனோஜ்

கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் OTT தொடர்பான நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மனோஜ் பாஜ்பாய்

“நான் நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது சம்பளமே இல்லாமல் பணியாற்றினேன். அப்போது மிகவும் பிஸியாக இருந்தேன். எந்த அளவுக்கு என்றால்இ நாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பது கூட தெரியாத அளவுக்கு தொடர்ந்து வேலை இருந்தது. திரும்பிச் செல்ல பேருந்துக்கு கூட பணமில்லை என்பதை நினைக்க விடாமல் நாடக குழுவினர் எங்களை வேலை வாங்கிக்கொண்டிருந்தனர். நாங்கள் ஆர்வத்துடன் பணியாற்றினோம். ஊதியமே வாங்காமல் வேலை செய்தோம். பணமில்லாமல் தெரிந்த நபர்கள் யாருமில்லாமல்இ சாப்பாட்டுக்கு வழியில்லாமல்இ வேலையில்லாமல் தான் மும்பை வந்தேன். 10 வருடங்கள் நாடகங்களில் வேலை பார்த்தேன்.

மும்பையில் என்னுடைய ஆரம்ப காலக்கட்ட போராட்டங்கள் மிகவும் மோசமாக இருந்தன. ‘சத்யா’ படத்துக்கு பிறகு காலம் மாறியது. அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு என்னை தயார்படுத்திக்கொள்ள கடுமையாக உழைக்க ஆரம்பித்தேன். எனவே, வாழ்வின் நெருக்கடியான காலக்கட்டங்கள் நல்லது என்றுதான் நினைக்கிறேன். இல்லாவிட்டால் உங்களுக்கான வாய்ப்புகளை நீங்கள் எப்படி பயன்படுத்திக்கொள்வீர்கள்?. ஆகவே, தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்றார்.

Share:

Related Articles