NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஏப்ரல் 27ம் திகதி கோலாகலமாக ஆரம்பமாகும் குக் வித் கோமாளி

விஜய் டிவியில் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி.முக்கியமானது. சமையலோடு சேர்த்து நிறைய கலாட்டா என்ற வகையில் ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியின் 5வது சீசனிற்காக தான் ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

4 சீசன்களில் வந்தவர்கள், புதியவர்கள் என குக் வித் கோமாளி சீசன் 5 நிறைய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர், தயாரிப்பாளர், புதிய நடுவர்கள் என நிறைய மாற்றங்கள் இந்த சீசனில் உள்ளது.

இதுநாள் வரை நிகழ்ச்சி வரப்போகிறது என்பதற்கான புரொமோக்கள் வெளியாகி வந்த நிலையில் முதல் எபிசோட் என்று தொடங்குகிறது என்ற அறிவிப்பு அட்டகாசமான புரொமோவுடன் வெளியாகியுள்ளது. குக் வித் கோமாளி சீசன் 5, ஏப்ரல் 27 முதல் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் இரவு 9.30 என்று ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டு புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles