NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐஸ்வர்யா ராய் மகள் ஆரத்யா உடல்நிலை பற்றி பொய் செய்தி! Youtube சேனல்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரின் 11 வயது மகள் ஆரத்யா ஏற்கனவே அதிகம் பாப்புலரான நபர் தான். அவரது போட்டோ வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது ஆரத்யா பச்சன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

தனது உடல்நிலை பற்றி சில youtube சேனல்கள் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் இருக்கிறார், இறந்து விட்டார் என பொய்யாக செய்தி பரப்பி இருக்கின்றனர். அந்த வீடியோக்களை நீக்கி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரத்யா கேட்டுக்கொண்டிருக்கிறார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் 9 youtube சேனல்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு இருக்கிறது. மேலும் ஆரத்யா உடல்நிலை பற்றி இனி வீடியோக்கள் வெளியிடவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

Share:

Related Articles