NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கலக்கிட்டீங்க.. ‘ஜெயிலர்’ வெற்றி: நண்பர் ரஜினி, நெல்சனை பாராட்டிய கமல்

Super Star ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் எப்படிப்பட்ட Hit என்பது ஊருக்கே தெரிந்த விஷயம்.

அந்தளவிற்கு Box Office வசூல் மழை பொழிந்து வருகிறது. படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பால் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். ரஜினி ரசிகர்களோ ரியல் பாக்ஸ் ஆபிஸ் கிங் ரிட்டர்ன் என கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையில் படத்தின் வெற்றி காரணமாக திரையுலக பிரபலங்களிடம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் உலக நாயகன் கமல், தன்னுடைய நண்பர் ரஜினியை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இத்தனை ஆண்டுகள் ஆகியும் நட்பு மாறாமல் இருவரும் ஒருவருடைய வெற்றிக்கு மற்றொருவர் வாழ்த்து தெரிவித்து வருவதை ரசிகர்கள் சிலாகித்து பேசி வருகின்றன. முன்னதாக ‘ஜெயிலர்’ படம் வந்தவுடனே நடிகர் விஜய் இயக்குனர் நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles