NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காஞ்சனா படத்தின் அடுத்த பாகம் 

ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். அதே சமயம் இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகத் திறமைகளை கொண்டவர்.

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் பென்ஸ், ஹண்டர் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் இவர் ரஜினியின் கூலி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் படை தலைவன் படத்தில் கேமியா ரோலில் நடித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸ், முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற காமெடி கலந்த ஹாரர் படங்களை இயக்கி, நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். கடந்த மாதம் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

ஹாரர் கதைக்கள பாணி பெருமளவு வெற்றிப் பெற்ற காரணத்தினால் அடுத்ததாக காஞ்சனா 4 திரைப்படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் திட்டமிட்டுள்ளார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் கூடுதல் தகவல்களைப் பற்றி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

Related Articles