NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காந்தார – 2 பட துணை நடிகர் உயிரிழப்பு !!

கன்னடத்தில் ரிஷப் ஷேட்டி அவர்களே இயக்கி அவரே நடித்த திரைப்படம்தான் காந்தார பாகம் ஒன்று . இது கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மஹ்தியில் நல்லதோர் வரவேற்ப்பினை பெற்றுள்ளது.

இதனையடுத்து இத்திரைப்படத்தின் பாகம் இரண்டினை எடுப்பதற்கான படப்பிடிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. குறித்த திரைப்படத்தில் துணை நடிகராக நடித்துவரும் கேரளா மாநிலத்தினை சேர்ந்த 32 வயதான கபில் நேற்று முன்தினம் (06.05 .2025 )அன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்தவுடன் தன்னுடைய நன்பர்களுடன் அருகில் இருக்கின்ற சவ்பெர்னிகா ஆற்றில் குழிக்கச்சென்றுள்ளார் . இதனையடுத்து ஆற்றின் ஆழத்திற்குச்சென்ற கபிலன் தண்ணீரில் தத்தளித்துள்ளார் , இதனை பார்த்த அவருடைய நண்பேர்கள் காப்பாற்ற செல்வதற்குள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் .

பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .இவரது மரணம் காந்தார – 2 படக்குழுவினை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .

Share:

Related Articles