NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய Lyca!

கேப்டன் மில்லர் திரைப்படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை Lyca கைப்பற்றியுள்ளதாக புதிய போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற டிசம்பர் 15ம் திகதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்படுள்ளது.

இந்நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை Lyca கைப்பற்றியுள்ளது.

Share:

Related Articles