NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

 “கேப்டன் மில்லர்” படக்குழுவின் Mass Plane

தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்த பின்னர் மெகா புரமோஷன் திட்டங்களை படக்குழுவினர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

முதல் கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை இதுவரை இல்லாத அளவில் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா முழுவதும் இந்த படத்தின் Promotion நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரிட்டிஷ் காலத்தில் இருந்த அடிமைத்தனம் அதன் பிறகும் அடிமைத்தனம் தொடர்வது குறித்த கதை அம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

Related Articles