NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கோட் படத்தின் புது அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்). படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம்பெற்று இருக்கும் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி விட்டன.

அந்த வரிசையில், இந்த படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

இதனிடையே எக்ஸ் தளத்தில், “இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பெரிய திரைப்படம் விஎஃப்எக்ஸ் பணிகள் முழுமை பெறாததால் ரிலீஸ் தள்ளி போக வாய்ப்புள்ளது,” என்ற தகவல் வெளியானது.

இந்த பதிவிற்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இரண்டு முறை பதில் அளித்தார்.

அதில், “இந்த தகவலில் உண்மையில்லை, நாங்கள் சரியான பாதையில் இருக்கிறோம், 24×7 பணியாற்றி வருகிறோம் கிக்ஆஸ் திரைப்படத்தை உருவாக்கி வருகிறோம், நெகடிவிட்டி மற்றும் பொய் செய்தியை பரப்ப வேண்டாம்,” என குறிப்பிட்டு இருந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் அளித்த இரண்டாவது பதிலில், “மன்னிக்கவும், நீங்கள் கோட்-ஐ டேக் செய்யவில்லை. நாங்கள் நேரத்திற்கு வருகிறோம், செப்டம்பர் 5 உலகம் முழுக்க,” என குறிப்பிட்டுள்ளார்.

இவரது இந்த பதிவுக்கு பதில் அளித்த எக்ஸ் தள பயனர் ஒருவர் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என கேட்டார்.

அதற்கு பதில் அளித்த அர்ச்சனா கல்பாத்தி “ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல்,” என பதில் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து கோட் படத்தின் அடுத்த அப்டேட் கிடைத்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles