NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கோலாகலமாக நடைபெற்ற கீர்த்தி பாண்டியண் அசோக் செல்வன் திருமணம்

“சூது கவ்வும்” படத்தில் அறிமுகமாகிய அசோக் செல்வன், பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடித்து வெளியான ‘போர்தொழில்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

“தும்பா” ‘அன்பிற்கினியாள்’ படங்களில் நாயகியாக நடித்தவரும், நடிகர் அருண்பாண்டியனின் மகளுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில், இவர்களின் திருமணம் நேற்று பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் நடந்து முடிந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கலந்து கொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

Share:

Related Articles