NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கோல்டன் ஸ்பேரோ பாடலை எழுதியது இவரா

நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.

இப்படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இது ஒரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாகும்.

திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்து இருந்தனர்.

இப்பாடலிற்கு `கோல்டன் ஸ்பேரோ’ என்ற தலைப்பு வைத்துள்ளனர். மேலும் இப்பாடலைக் குறித்து ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார் என தெரிவித்துள்ளனர்.

இப்பாடலிற்கு தனுஷின் மூத்த மகனான யாத்ரா தனுஷ் இப்பாடலிற்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார் என எஸ் ஜே சூர்யா அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுருந்தார். இதைத்தொடர்ந்து சமூக வலைத்தள பக்கத்தில் அனைவரும் யாத்ரா தனுஷ் பாடலசாரியரானார் என செய்திகள் வலம் வந்தனர்.

ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனுஷ் ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளார். அதில் கோல்டன் ஸ்பேரோ பாடலை பாடியவர் சுபலட்சுமி, ஜி.வி பிரகாஷ் குமார், தனுஷ் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ளனர்.

பாடலின் வரிகளை அறிவு எழுதியுள்ளார் என புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இப்பாடல் ஆகஸ்ட் 30 ஆம் திகதி வெளியாகவுள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Share:

Related Articles