NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சமந்தாவை அவமானப்படுத்திய ஓடிடி நிறுவனம்! படம் தோல்வியானதால் இப்படியா செய்வாங்க

சமந்தா மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களில் அதிகம் கவனம் வருகிறார். இருப்பினும் அவரது சமீபத்திய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சமந்தா நடிப்பில் கடந்த மாதம் ரிலீஸ் ஆன சாகுந்தலம் படம் பெரிய தோல்வியை தான் தழுவியது. அந்த படத்தால் தயாரிப்பாளருக்கு 20 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் தில் ராஜுவும் படம் மிகப்பெரிய நஷ்டம் என கூறி இருந்தார்.

இந்நிலையில் தற்போது சாகுந்தலம் படம் அமேசான் ப்ரைம் தளத்தில் எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென ரிலீஸ் ஆகி இருக்கிறது.

 அதை பார்த்த ரசிகர்கள், படம் தோல்வி ஆனதால் சமந்தாவை நேரடியாக அவமானப்படுத்துகிறார்கள் என கூறி வருகிறார்கள்.படம் ஓடிடியில் வரும் முன்பு ஒரு ட்ரெய்லர் அல்லது அறிவிப்பு கூட வெளியிடவில்லையே என ரசிகர்கள் ட்விட்டரில் ஆதங்கத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Share:

Related Articles