NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சமுதாயத்தைத் திருத்த படம் எடுக்கவில்லை – சித்தார்த்

எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சித்தார்த், அஞ்சலி நாயர், நிமிஷா சஜயன், குழந்தை நட்சத்திரங்கள் பஃபியா , சஹஸ்ரா ஆகியோர் நடித்திருந்த படம் ‘சித்தா’.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சித்தா படத்தின் வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சித்தார்த், “இது அருண்குமாரின் ‘சித்தா’. வெற்றி, தோல்வி என்பது குறித்து நாங்கள் முடிவு செய்யாமல் படத்தின் கதைக்கருவுக்காக எடுத்தோம். நாட்டை மாற்றவோ, சமுதாயத்தைத் திருத்தவோ படம் எடுக்கவில்லை.

நல்ல விஷயம் பல ஆயிரம் வகையில் நடக்கலாம் என்பதைத் தெரியப்படுத்த வேண்டும் என விரும்பினோம்,” என்று தெரிவித்தார்.

Share:

Related Articles