NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதி யின் ‘காந்தி Talks’ 

சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதி நடித்த மௌவுன படமான ‘காந்தி Talks’ திரையிடப்பட்டுள்ளது.சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் மௌவுன படம் என்ற பெருமையை ‘காந்தி டாக்ஸ்’ பெற்றுள்ளது.

இந்தத் திரைப்படம் Dark காமெடியை அடிப்படையாகக் கொண்டு உருவானது.

ஒரு கதாபாத்திரம் தனது நிதித் தேவைகளைக் கையாளும் போது, அந்தக் கதாபாத்திரத்தின் பணத்தேவை மற்றவர்களின் வாழ்க்கையில் எப்படி ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை படம் விவரிக்கிறது.

ஒரு வேலையில்லா பட்டதாரி, தனக்கான வேலையை சாத்தியமாக்க போராடும் போது அவன் வாழ்வில் ஒரு தொழிலதிபர் மற்றும் ஒரு திருடனைக் கடக்கிறான்.

அப்போது அவன் வாழ்க்கையில் எப்படியான திருப்பம் ஏற்படுகிறது என்பதையும் கதை விவரிக்கிறது.

‘காந்தி டாக்ஸ்’ படம் உரையாடல் இல்லாமல் காட்சிகள் மூலம் கதை சொல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மௌன படம் எடுப்பது சாதாரணமானது அல்ல.

இது ஒரு கதை சொல்லும் வடிவம். உரையாடல் இல்லாமல் உணர்வுகளை வெளிப்படுத்துவது பயமாக மட்டுமல்ல, சுவாரஸ்யமாகவும், சவாலாகவும் இருந்தது.

மேலும், இந்த சவால்கள் எழுத்து, படமாக்கல், மற்றும் எடிட்டிங் ஆகியவற்றிலும் இருந்தது என்று இயக்குநர் கிஷோர்  குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles