NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சாலையில் மயங்கி விழுந்தவரை காப்பாற்றிய நடிகர் “குர்மீத்”

கடந்த 2008ம் ஆண்டு சின்னத்திரையில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் ராமராக நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் Bollywood நடிகர் குர்மீத் சவுத்ரி.

பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்தவர், 2015ம் ஆண்டு வெளியான ‘காமோஷியா’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இந்நிலையில், மும்பையின் அந்தேரி சாலையில் நடந்து சென்ற நபர் ஒருவர் சாலையில் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த நடிகர் குர்மீத் சவுத்ரி அவரது நெஞ்சில் கைவைத்து அழுத்தி உடனடியாக C B R சிகிச்சை கொடுத்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் குர்மீத் சவுத்ரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Share:

Related Articles