NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘சிறகடிக்க ஆசை’ தொடரில் இருந்து வெளியேறுகிறாரா முத்து?

Vijay TVன் TRPயை தூக்கி நிறுத்தி வருவது சிறகடிக்க ஆசை தொடர் தான். இந்த தொடர் மூலம் மக்களின் பேராதரவை பெற்றவர் தான் முத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி வசந்த். 

முத்து-மீனா திருமணத்தோடு 300 Episode சிறகடிக்க ஆசை தொடர் எட்டிவிட வெற்றி வசந்த் தனது Instaல் லைவ்வில் வந்தார்.

அப்போது ரசிகர்கள் அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டு வந்தனர். அதில் ஒருவர் நீங்கள் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் சிறகடிக்க ஆசை தொடரில் நடிப்பீர்களா இல்லை விலகுவீர்களா என கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த வெற்றி வசந்த் இந்த சீரியலில் இருந்து எப்போதுமே விலக மாட்டேன். இந்த சீரியல் இன்னும் எத்தனை வருடம் ஒளிபரப்பானாலும் சரி அதில் சுபம் என்ற ஒரு வார்த்தை வரும் வரைக்கும் நான் கதாநாயகனாக இருந்து கொண்டே இருப்பேன்.

இந்த சீரியல்தான் எனக்கு ஒரு மறு வாழ்க்கையை தந்தது. Web Series, திரைப்படங்கள் நடிக்கிறேன், ஆனால் அதையெல்லாம் தாண்டி சிறகடிக்க ஆசை தொடர் தான் எனது Main வேலை என தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.  

Share:

Related Articles