NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தமிழ் சினிமாவின் டாப் பிரபலம் என்ட்ரி கொடுக்கிறாரா? யார் தெரியுமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இதனுடைய 9வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வாரம் டாப் 5 போட்டியாளர்களின் தேர்வுக்கான போட்டி நடைபெற்றது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் விருந்தினராக வருகை தந்திருந்தார். அதற்க்கு முன் டி. ராஜேந்தர், பாக்யராஜ் கூட வந்திருந்தார்கள். இந்நிலையில், இவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா என்ட்ரி கொடுக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

வரும் வாரம் யுவன் ஷங்கர் ராஜா விருந்தினராக கலந்துகொள்ளப்போகும் சுற்று அரையிறுதி சுற்றாக கூட இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. 

Share:

Related Articles