NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சூரரைப் போற்று இந்தி ரீமேக் டிரைலர் வெளியானது

சூர்யா நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி ரிலீஸ் செய்யப்பட்டது. சூர்யாவிற்கு மிகப்பெரிய திரைப்படமாக இப்படம் அமைந்தது.

இதில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது.

சர்ஃபிரா திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் தற்பொழுது

வெளியாகியுள்ளது. சூரரைப்போற்று படத்தின் அதே தாக்கத்தை இந்த படத்தின் டிரைலர் ஏற்படுத்துகிறது. இந்தி சினிமாவில் கதையை அவரகளுக்கு ஏற்ற பாணியில் சிலவற்றை

மாற்றுவார்கள் அதுப் போல் இல்லாமல் சுதா கொங்கரா அவரது கண்ணோட்டத்தை சிறப்பாக காட்சி அமைத்துள்ளார். இதனால் இப்படத்தின் மேல் கூடுதல் நம்பிக்கை பிறக்கிறது.

நடிகர் சூர்யா கவுரவ தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles