NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘ஜவான்’ குறித்து  ட்விட்டரில் கருத்து தெரிவித்த ஷாருக்கான்

பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லி இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார்.

இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில்‘ ஜவான் படம் வெளியாகிறது.

முதலில் June ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடையாததால் வரும் செப்டம்பர் 7ஆம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ட்விட்டரில் ‘AskSRK’ என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் ஷாருக்கானிடம் கேள்விகளை முன்வைத்தனர்.

அப்போது ரசிகர் ஒருவர், “இன்று மாலை என்ன ப்ளான்’’ என கேட்ட கேள்விக்கு “அட்லியுடன் இணைந்து ‘ஜவான்’ படத்தை பார்க்கலாம் என யோசிக்கிறேன்” என ஷாருக்கான் பதிலளித்துள்ளார்.

இதன் மூலம் ‘ஜவான்’ படத்தொகுப்பு முடிந்துள்ளதை ஷாருக்கான் உறுதி செய்திருப்பதாக ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share:

Related Articles