“ஜெயிலர்” படம் வெளியாகி 18 நாட்கள் கடந்த நிலையிலும் இன்னும் ஆரவாரம் குறையாமல் தான் இருக்கிறது.
திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் “ஜெயிலர்” எப்போது OTT தளத்தில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தான் இப்போது அதிகமாக இருக்கிறது.
அதன்படி இப்படத்தின் OTT உரிமையை “Netfilix” நிறுவனம் பல கோடிகளை கொடுத்து தட்டி தூக்கி இருக்கிறது.
Netfilix நிறுவனம் ஜெயிலர் படத்தையும் 100 கோடி (இந்திய பெறுமதி) கொடுத்து வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதனாலேயே விரைவில் படத்தை தங்களுடைய தளத்தில் வெளியிடவும் அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.