NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“ஜெயிலர்” OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?

Super Star ரஜினிகாந்த் நடித்த படங்கள் சில கடந்த 5 ஆண்டுகளில் விமர்சன ரீதியாக பயங்கர அடி வாங்கியது.

கடைசியாக நடித்த அண்ணாத்த படமும் அதற்கு முன்னதாக நடித்திருந்த தர்பார், பேட்ட போன்ற படங்களும் வசூலில் குறைக்கவில்லை என்றாலும், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.

இதனால் அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்த ரஜினிகாந்த் பல இயக்குநர்களிடம் கதை கேட்டு கடைசியாக நெல்சனை தேர்வு செய்தார்.

நெல்சன், Super Star ரஜினிகாந்தை அதிரடியாக களமிறக்கி, ஜெயிலர் படத்தில் Mass காட்டி விமர்சனம் செய்தவர்களுக்கும் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

August 10 வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூலை அள்ளி வருகிறது. 2023 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த ஐந்தாவது இந்தியப் படமாகத் ஜெயிலர் படம் திகழ்கிறது.

ஜெயிலர் படம் வெளியாகி 28 நாள் ஆனபின் September 6 அல்லது 7 “Sun Next,”Netfilix” ஆகிய OTT தளங்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles