‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் லெஜண்ட் சரவணன்.இந்த நிலையில் இவரின் இரண்டாவது திரைப்படமானது இயக்குனர் துரை செந்தில்குமாரினால் இயக்கப்பட்டுவருகிறது. இதற்க்கான படப்பிடிப்புகள் september மாதம் பூஜையுடன் தூத்துக்குடியில் ஆரம்பமாகி தற்போது ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில்பகிரப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா, நடிகர் சாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதை தொடர்ந்து லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக இருவர் உள்ளம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பாயல் ராஜ்புத் நடித்து வருகிறா ர்
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்க பட்டுவரும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜிப்ரான் களமிறங்குகிறார். இத் திரைப்படம் எதிர் வருகின்ற ஏப்ரல் மாதம் (2025 )வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது .