36 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் மணிரத்தினம் மற்றும் கமல்ஹாசனின் கூட்டணியில் உருவான திரைப்படம்தான் ”தக் லைப்”. இசைப்புயல் ஏ.ஆர் . ரகுமான் இசையமைத்திருக்க கூடிய இத் திரைப்படம் இன்றைய தினம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று ஒருநாள் மட்டும், முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி, இறுதி காட்சி அதிகாலை 2 மணி வரை மொத்தம் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றிருந்தது. இதன் போது திரைப்படத்தில் பாடகி தீயினால் பாடப்பட்ட முத்த மழை என்ற பாடலை , பாடகி சின்மை தன்னுடைய தனித்துவமான ஸ்டைலில் மிக அழகாக மேடையில் பாடியிருப்பார். இதற்க்கு மக்கள் மத்தியில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதனிடையில் திரைப்படத்தின் ஆல்பத்தில் இருக்கும் ஒன்பது பாடல்களுடன் பத்தாவது பாடலாக சின்மயின் குரலில் பாடப்பட்ட முத்த மழை ரிப்ரைஸ் வேர்சான் சேர்க்கப்பட்டுள்ளது.

இருப்பினும் திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காதது போல் தீ மற்றும் சின்மை ஆகிய இருவராலும் பாடப்பட்ட முத்த மழை பாடல் இடம்பெறவில்லை. இப்பாடலை எதிர் பார்த்து திரைப்படத்தினை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.