NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தங்களது வாக்குகளை பதிவு செய்த பிரபலங்கள்

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் இன்று ஆரம்பமாகி விறு விறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாக்குகளை தமக்குரிய வாக்குச்சாவடிகளில் சென்று பதிவு செய்துகொண்டிருக்கின்றனர்.

நடிகர் அஜித் வாக்கு பதிவுகள் தொடங்க முன்னமே வந்து வரிசையில் நின்று வாக்களித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், இளையராஜா எனப் பல பிரபலங்கள் காலையிலேயே அவர்களுது வாக்கை பதிவு செய்தனர்.

அத்தோடு தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான தளபதி விஜய் அவர்களும் தமது வாக்கினை பதிவு செய்துள்ளார். அவர் வாக்களிப்பதற்காக தனது நீலாங்கரை வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு செல்லும் போது ஒரே பதற்றமான நிலைமை நிலவியுள்ளது.. மக்கள் அவரைச் சூழ்ந்து கோஷங்களை எழுப்பியும் ,. தொலைபேசிகளில் படங்கள், காணொளிகளை எடுத்தும் தமது ஆதரவை வெளிக்காட்டியுள்ளனர். தளபதி தலைமையிலான தமிழக வெற்றி கழகம் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles