NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனுஷ் இயக்கி நடிக்கும் D50 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் திகதி குறித்து அறிவிப்பு

தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற 19-ம் திகதி வெளியிப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

தனுஷின் 50-வது படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது. அது தொடர்பான போஸ்டரை படக்குழு அப்போது வெளியிட்டிருந்தது.

அதில் தலையில் கேப் அணிந்து தனுஷ் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles