NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தமன்னா அணிந்திருப்பது உலகின் 5வது பெரிய வைரமா?

கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் நடிகை தமன்னா கையில் மிகப்பெரிய வைர மோதிரம் அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.

இது உலகின் 5-வது பெரிய வைரம் என்றும் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ திரைப்படத்தில் தமன்னாவின் நடிப்பை பார்த்து வியந்த நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா இதை நடிகை தமன்னாவிற்கு பரிசாகக் கொடுத்தார் என்றும் செய்திகள் பரவி வந்தது.

இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது கண்டு அதிர்ச்சியடைந்த நடிகை தமன்னா, இந்த செய்தியை உடனடியாக மறுத்துள்ளார். மேலும், “இது வெறும் ‘பாட்டில் ஓபனர்’தான், வைரம் இல்லை” என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles