NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தமிழக வெற்றிக் கழக கல்வி விருது வழங்கும் விழா!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்படும் கல்வி விருது வழங்கும் விழா நடிகர் விஜய் முன்னிலையில் ஆரம்பமாகியுள்ளது.

10 வகுப்பு மற்றும் 12 வகுப்பு பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாவை தமிழக வெற்றிக் கழகம் நடத்துகிறது.

குறித்த பாராட்டு விழாவானது இன்று 28 ஆம் திகதி முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

முதல் கட்டமாக 21 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது.

அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இன்றைய விழாவில் பங்கேற்றுக்கொள்வார்கள்.

வெளி இடங்களில் இருந்து வருபவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் வாகனமும் ஏற்பாடு செய்துள்ளது.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு மதிய உணவாக சாதம், கதம்ப சாம்பார், வத்தக்குழம்பு, தக்காளி ரசம், மோர், உருளை காரக்கறி, அவரை மணிலா பொரியல், அவியல், இஞ்சி துவையல், ஆனியன் மணிலா, தயிர் பச்சடி, அப்பளம், வடை, வெற்றிலை பாயாசம் என்பவை வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் அதிகாலையே மண்டபத்திற்கு வருகை தந்து மாணவர்களுடன் மாணவர்களாக அமர்ந்திருக்கும் வீடியோக்கள் ட்ரெண்டாகியுள்ளது.

மேலும், சற்றுமுன்னர் கல்வி விருது ஆரம்பமாகியுள்ளது.

Share:

Related Articles