NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தயாராகிறது யோகி பாபுவின் ‘சட்னி சாம்பார்’ Web தொடர்!

S.Jசூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான  'பொம்மை' திரைப்படத்தை இயக்கிய ராதா மோகன் தற்போது "சட்னி சாம்பார்" என்ற Web தொடரை இயக்குகிறார். 

இந்த Web தொடரில் யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். வாணிபோஜன், சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, ஐஸ்வர்யா, சம்யுக்தா விஸ்வநாத் மற்றும் நம்ரிதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

“சட்னி சாம்பார்” Webதொடர் “HotStar” OTT தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

நடிகர் யோகிபாபு இது குறித்து பேசியதாவது, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும்படியான ஒரு அருமையான சிரீஸாக “சட்னி சாம்பார்” இருக்கும் என்று கூறியுள்ளார்

கைதி மற்றும் Master போன்ற படங்களில் பணியாற்றிய எழுத்தாளர் பொன் பார்த்திபன் “சட்னி சாம்பார்” Web தொடருக்கு வசனங்களை எழுதியுள்ளார் என்பதும் குறிபிடத்தக்கது.

Share:

Related Articles