NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தயாராகும் கார்த்தியின் 27வது படம்

கார்த்தி, தற்போது இயக்குநர் "ராஜு முருகன்: இயக்கத்தில் 'ஜப்பான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். 

சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின்Teasar சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், கார்த்தியின் 27வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி ’96’ படத்தின் இயக்குனர் “பிரேம் குமார்” இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். இப்படத்தை சூர்யாவின் (2D Entertainment) நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைத்தளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles