NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தளபதி 68ல் இருக்கும் சர்ப்ரைஸ் இதுவா?..

தளபதி 68ஆவது படத்தில் வெங்கட் பிரபு சர்ப்ரைஸ் ஒன்றை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

லியோ படத்தில் நடித்து முடித்து கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கும் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடித்துவருகிறார்.

கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு, லியோ ஆகிய படங்கள் வசூலை குவித்ததாக கூறப்பட்டாலும் விமர்சன ரீதியாக அடிவாங்கியிருப்பதாகவே திரைத்துறையினரால் கூறப்படுகிறது.

காப்பாற்றுமா தளபதி 68: லியோ படம் மொத்தம் 560 கோடி ரூபாயை வசூலித்ததாக கூறப்பட்டாலும் படத்தின் ரிசல்ட் என்னவோ விஜய்க்கும், அவரது ரசிகர்களுக்கும் கொஞ்சம் அப்செட்டைத்தான் கொடுத்திருக்கிறது. எனவே தளபதி 68 படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள் அவர்கள். வெங்கட் பிரபு படம் அனைவரையும் கவரும் என்பதால் தளபதி 68 காப்பாற்றும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

தளபதி 68 பூஜை: லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு தளபதி 68 பூஜை போடப்பட்டது. சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்ட பூஜையில் விஜய், வெங்கட் பிரபு, பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, கங்கை அமரன், மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதுதொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியானது.

பாங்காக்கில் ஷூட்டிங்: பூஜையை முடித்துவிட்டு ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாகவும் அதனை ராஜுசுந்தரம் கோரியோகிராஃபி செய்ய விஜய், பிரசாந்த் உள்ளிட்டோர் நடனம் ஆடியதாகவும் கூறப்படுகிறது. அடுத்தக்கட்ட ஷெட்யூலுக்காக படக்குழு பாங்காக்கிற்கு சென்றிருக்கிறது. . இப்படத்தில் மைக் மோகன் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் ஜெய்?: இந்நிலையில் தளபதி 68 படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தில் ஜெய் ஒரு ரோலில் நடிக்கிறார் என்றும் அந்த ரோல் மிகப்பெரிய திருப்புமுனையாக கதையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

விக்ரம் படத்தில் எப்படி சூர்யா ரோலை லோகேஷ் கனகராஜ் சர்ப்ரைஸாக இறக்கினாரோ அதே ஃபார்முலாவை தளபதி 68ல் வெங்கட் பிரபு ஃபாலோ செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. முன்னதாக விஜய்யும், ஜெய்யும் இணைந்து பகவதி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles