NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்

Bollywood திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழும் சல்மான்கானுக்கு, ஏற்கனவே கொலை மிரட்டல்கள் வந்து அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சல்மான்கானுக்கு Face Book மூலமாக மும்பையின் நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோயிடம் இருந்து கொலை மிரட்டல் வந்து இருக்கிறது.

ஆனால் லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது சிறையில் இருப்பதால் அவரது பெயரில் யார் இந்த மிரட்டலை விடுத்துள்ளனர் என்று மும்பை பொலிஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

சல்மான்கானுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் முக்கிய நிகழ்வுகள் குறித்து பொலீசாரிடம் தெரிவிக்கவும் அவரது பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Share:

Related Articles