நடிகர் மற்றும் தமிழ் நடிகர் சங்க பொருளாளருமான விஷால் நடிகர் சங்கம்தான் தனக்கு எல்லாமே என கூறியிருந்தார் அதிலும் குறிப்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்ட பின்புதான் தனக்கு திருமணம் எனவும் கூறியிருந்தார்.
இந்தநிலையில் நடிகர் விஷாலுக்கு இன்னும் 4 மாதங்களில் திருமணம் என தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகின்றது. அதற்க்கேற்றவாரே தற்போது நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமான பணிகள் வேகமாக நடைப்பெற்று வருகின்றது. இவற்றை தொடர்புபடுத்தி சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
எனினும் சிங்கிளாக வளம் வந்து கொண்டிருந்த நடிகர் விஷால் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு திருமணம் நடக்கப்போவதாகவும் பெண் பார்த்துவிட்டதாகவும் கூறியிருந்தார் , இதனை தொடர்ந்து நடிகை தன்ஷிகா இயக்குனர் கவுதம் கிருஷ்ணாவின் ”யோகி டா” திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் இந்நிலையில் நேற்றைய தினம் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்விழ நடிகர் விஷாலும் கலந்து கொண்டார்.
அப்போது மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்” தன்ஷிகா நல்ல ஹைட். உயர்ந்த கதாநாயகி. அவருக்கு அருகில் சரியான ஆள் தான் இருக்கிறார்” என விஷால் திருமணம் பற்றி பேசினார். இவரை தொடர்ந்து ‘வெரி குட் செலக்ஷன்’ என நடிகர் ராதாரவி பேசும்போது மேடையில் விஷால் – தன்ஷிகா ஜோடியை வாழ்த்தினார்.

இப்படியான வாழ்த்துக்களை தொடர்ந்தும் பெற்றுவந்த நிலையில் நடிகை தன்ஷிகா பேசும் போது நங்கைகள் இருவரும் 15 வருடகால நல்ல நண்பர்கள் இந்த நிலையில் இப்படியே இந்த நட்பை கொண்டுபோவதா இல்லாவிடின் இந்த நட்பின் அடுத்த கட்டத்தை நோக்கி போவதா என யோசித்தோம் அதன் பிறகு எங்கள் இருவருக்கும் நல்லவொரு புரிந்துணர்வு இருப்பதனால் அடுத்தகட்டத்துக்கு நகரலாம் என இம்முடிவினை எடுத்தோம். மேலும் இனியும் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என கூறிய நடிகை தன்ஷிகா எங்களுக்கு எதிர்வருகின்ற ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி திருமணம் நக்கபோவதாகவும் கூறியிருந்தார் .
இவரை தொடர்ந்து பேசிய நடிகர் விஷால் நான் இவை திருமணம் செய்ய கொடுத்து வைத்திருக்கிறேன் எங்களுக்குள் எப்போதும் ஒரு நல்ல புரிதியால் இருக்கிறது அதே புரிதலுடன் திருமணத்தின் பின்னும் சந்தோஷமான ஒரு வாழ்வை வாழப்போகின்றோம், மேலும் எங்களது திருமணம் குறித்து கிசு கிசுக்களை பரப்ப வேண்டாம் என கூறியிருந்தார்.