NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகர் ஷாருக்கன் குறித்து ‘ஜான் சீனா’

அண்மையில் நடைபெற்று முடிந்த ஆனந்த் அம்பானி திருமண விழாவுக்கு ஜான் சீனா வருகை தந்தார்.  அப்போது அவர் ஷாருக்கானை சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பு குறித்து ஜான் சீனா கூறுகையில், 

“நான் ஆனந்த் அம்பானி திருமணம் முடிந்து வெளியேறும்போது தான் ஷாருக்கானை சந்தித்தேன். அதை என்னால் மறக்கவே முடியாது. ஒரு சிறந்த பயணத்தின் அற்புதமான முடிவைப்போல அந்த சந்திப்பு இருந்தது.

உங்கள் வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்திய ஒருவரின் கையை குலுக்கி, அவருக்கு நன்றி தெரிவிப்பது மிகவும் மகிழ்ச்சியான தருணம். ஷாருக்கான் அன்பானவர், தாராள மனம் கொண்டவர்.

அவரது குணத்தை அறிந்து நான் ஆச்சரியமடைந்தேன். குறிப்பாக ஷாருக்கானின் ‘TED TALKS’ என் வாழ்க்கையில் முக்கியமான பங்களிப்பை செலுத்தியுள்ளன. என் வாழ்க்கையின் கடினமான நேரத்தில் அந்த உரையைக் கேட்டேன். அது என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. அவரின் அந்த உரையைக் கேட்ட பிறகுதான் என்னிடம் உள்ள பாசிட்டிவான விஷயங்களைத் தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு செயல்பட்டேன். அப்போதிலிருந்து எனக்கான வாய்ப்புகளை வீணாக்காமல் கடுமையாக உழைத்து வருகிறேன்” என்றார்.

Share:

Related Articles