NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகை சமந்தாவை புகழ்ந்த கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த ‘சாணிக்காயிதம்’ படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது. தற்போது தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இவர் நடித்த தசரா திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது சமந்தா குறித்த கேள்விக்கு, “நான் வியந்து பார்க்கும் ஒரு நபர் சமந்தா. நான் பார்த்ததில் மிகவும் வலிமையான மனம் கொண்டவர். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அவரை யாராலும் தடுக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பகிர்ந்து கீர்த்தி சுரேஷிற்கு நன்றி தெரிவித்துள்ளார் சமந்தா.

https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-keerthy-suresh-post-goes-viral-597444
Share:

Related Articles