NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகை சமந்தா சினிமாவில் இருந்து விலகும் முடிவில் உறுதி

நடிகை சமந்தா விவாகரத்துக்கு பிறகு எக்கச்சக்க படங்களில் ஒப்பந்தம் ஆகி இருந்தார். அதில் அவர் பிசியாக நடித்து வந்த நேரத்தில் தான் அவருக்கு மயோசிட்டிஸ் என்ற நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டே அவர் படங்களில் பணிகளை செய்து முடித்தார். ஒருவழியாக சமந்தா தற்போது ஏற்கனவே ஒப்பந்தம் ஆன படங்களின் வேலைகளை முடித்தும் கொடுத்து வருகிறார்.

மேலும் இன்னும் மூன்று நாட்களில் கேரவன் வாழ்க்கை முடிவுக்கு வரும் என அவர் குறிப்பிட்டு இருப்பதால் சினிமாவில் இருந்து பிரேக் எடுப்பதை அவர் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டார் என்றே சொல்லலாம். அவர் எப்போது மீண்டும் ReEntry கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

Share:

Related Articles