NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகை தமன்னாவிற்கு விரைவில் டும் டும் டும்

நடிகை தமன்னா, ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். தங்கள் காதலை இருவரும் வெளிப்படையாக அறிவித்துவிட்டனர்.

இந்நிலையில் இவர்கள் திருமணம் பற்றி தமன்னாவிடம் கேட்டபோது, “திருமணம் என்ற அமைப்பின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்ளத்தான் இருக்கிறேன்.

இப்போது அதற்கான மனநிலை இல்லை. நடிப்பு இப்போது சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. அதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தமன்னாவின் வீட்டில் திருமண பேச்சுவார்த்தைகளைத் துவங்கி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர் என்கிறார்கள்.

Share:

Related Articles