NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

 நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவில் இருந்து விலகியது ஏன்? 

 தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. இப்போது ஹிந்தி Web தொடர்களில் கவனம் செலுத்தி வரும் அவர், தென்னிந்திய படங்களில் இருந்து விலகி இருப்பது ஏன் என்று தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில், சில சூத்திரங்கள் இருக்கின்றன. அவை எளிதானவை. சில படங்களில், எனது கதாபாத்திரங்களுடன் என்னால் பொருந்த முடியவில்லை. இயக்குநர்களிடம் அதைக் குறைக்கும்படி கேட்டிருக்கிறேன். சகிக்க முடியாத அளவுக்கு ஆணாதிக்கத்தைக் கொண்டாடும் படங்களில் நடிக்காமல் இருக்க முயற்சி செய்யத் தொடங்கினேன்.

அந்த வகையில் எனது வெற்றி, தோல்வி இரண்டில் இருந்தும் விலகி இருக்கிறேன். சினிமாவுக்கு வந்து 17 வருடங்களுக்குப் பிறகும் ஒவ்வொரு நாளும் கேமராவை எதிர்கொள்ளும் ஆசையுடன் எழுகிறேன். நடிப்பது எனது விருப்பம். அது என்னை மிகவும் உற்சாகப் படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles