NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நித்யா மேனன் படம் O.T.T யில் ரிலீஸ்!

‘வெப்பம்’, ‘ஓ காதல் கண்மணி’, ‘மெர்சல்’. ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர், நித்யா மேனன். தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் ஏராளமான படங்கள் நடித்துள்ளார். 

நித்யா மேனன் தற்போது அறிமுக இயக்குனர் கோமடேஷ் உபாத்தியே இயக்கியுள்ள ‘குமாரி ஸ்ரீமதி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள இந்த படம் ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. தமிழ், மலையாளம், இந்தி மொழிகளிலும் வெளியாகிறது.

2 வருடங்களாக அவர் தெலுங்கு படங்கள் நடிக்காத நிலையில், ஓ.டி.டி.யில் நேரடியாக வெளியாக உள்ள இந்த திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து படக்குழுவினர் கூறுகையில், இந்த படத்தில் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் பெண்ணாக நித்யாமேனன் நடித்துள்ளார்’, என்றனர்.

‘குமாரி ஸ்ரீமதி’ படத்தின் போஸ்டரும் தற்போது வெளியாகி இருக்கிறது. இதனை ரசிகர்கள் வரவேற்று சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழில் தனுஷ் இயக்கி, நடிக்க இருக்கும் புதிய படத்தில் நித்யாமேனன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles