NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் இயக்கும் சேரன்… ஹீரோவாக கிச்சா சுதீப்!

தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் கிச்சா சுதீப். ராஜமௌலி இயக்கத்தில் அவர் நடித்த ஈகா திரைப்படம் இந்தியா முழுவதும் ஹிட் ஆகி அவருக்கு பிரபலத்தைப் பெற்றுத் தந்தது. அதையடுத்து இப்போது அவர் பேன் இந்தியா படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.தமிழில் வெளியாகி ஹிட்டான சேது மற்றும் ஆட்டோகிராஃப் போன்ற படங்களை ரீமேக் செய்து அதில் நடித்து ஹிட் படங்களைக் கொடுத்துக்கொண்டார். இந்நிலையில் இப்போது அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் கிச்சா சுதீப், கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிந்ததும் மூன்று படங்களில் நடிக்க உள்ளாராம். அதில் ஒரு படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சேரன் இயக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.
ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை திரைப்படத்துக்குப் பிறகு சேரன், திருமணம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் எந்த படமும் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles