NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

படத்தின் மீது தயாரிப்பாளருக்குத் தான் நம்பிக்கை இருக்க வேண்டும்

ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கி இருக்கும் படம் சைரன்.

அடுத்த வாரம் ரிலீசாக இருக்கும் சைரன் படத்தின் விளம்பர பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இது தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஜெயம் ரவி, “மிகச் சந்தோஷமான தருணம். எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய படம். இப்படம் ரிலீசுக்கு வருகிறது.

நல்ல படத்திற்கு எப்போதும் ஆதரவு தருவீர்கள். இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். முதன் முதலில் ரூபனிடம் இருந்து தான் இந்தப்படம் ஆரம்பித்தது. அடங்கமறு இயக்குநரை அவர் தான் அனுப்பி வைத்தார்.

அந்தப்படம் பெரிய வெற்றி. இந்த படமும் கண்டிப்பாக வெற்றியடையும்.”

ஒரு படத்தின் மீது தயாரிப்பாளருக்குத் தான் நம்பிக்கை இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை அவரிடம் இருந்து ஆரம்பித்தது எனக்குச் சந்தோசம். இந்தப்படத்தில் எமோஷன் மிக முக்கியம், அதைத் திரையில் கொண்டுவருவது முக்கியம். ஜி.வி. பிரகாஷ் தான் இந்த படத்திற்கு இசையமைக்க வேண்டும் என ஆசைப்பட்டோம்.

அவரும் ஒப்புக்கொண்டார். இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருத்தர் ஜி.வி. பிரகாஷ்,” என்று தெரிவித்தார்.

இப்படம் உலகமெங்கும் பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜய்குமார் தயாரித்துள்ளார். 

Share:

Related Articles