அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படம் தான் ‘தெறி’ இந்தப் படம் இப்போது ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. விஜய் நடித்த கதாபாத்திரத்தில் வருண் தவண் நடிக்கிறார்.
இந்நிலையில் இதன் Action காட்சியில் நடித்தபோது நடிகர் வருண் தவண் காயமடைந்துள்ளார். இதை அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“படப்பிடிப்பில் எனக்குக் காயம் ஏற்பட்டது. எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் இப்போது இதைதான் செய்கிறேன்” என்று ஐஸ் தண்ணீரில் காலை வைத்துள்ள புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.